Theme Check

எந்த நேரத்திலும் கொரோனா 3ஆவது பரவலாம்... இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை !!

எந்த நேரத்திலும் கொரோனா 3ஆவது பரவலாம்... இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை !!

எந்த நேரத்திலும் கொரோனா 3ஆவது பரவலாம்... இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை !!
X

மக்கள் கூட்டமாக கூடுவதால் இந்தியாவில் எந்த நேரத்திலும் கொரேனா மூன்றாவது அலை தாக்கலாம் என இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாடு இப்போதுதான் கொரோனா 2ஆவது அலையின் பேரழிவில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது. தொற்று பாதிப்புகளின் கடந்த காலங்கள், சர்வதேச நிலவரங்களின்படி கொரோனா 3ஆவது அலை என்பது தவிர்க்க முடியாதது.

எந்த நேரத்திலும் மூன்றாவது அலை இந்தியாவை தாக்கக் கூடும். இப்படியான சூழ்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலாக்கள், யாத்திரைகள் என்பதெல்லாம் மக்களுக்கு அவசியமானதுதான். ஆனால் இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்.

கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளாமல் இதுபோல் ஒன்று கூடல்களுக்கு அனுமதித்தால் கொரோனா மூன்றாம் அலை அதிவேகமாக பரவ இவை காரணமாகிவிடும். கடந்த ஒன்றரை ஆண்டுகால படிப்பினைகள் மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது; கொரோனாவை தடுக்கும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவது ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும், என அதில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it