தமிழகத்தில் கொரோனா 3ஆவது அலை பரவல் தொடங்கியது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் !!
தமிழகத்தில் கொரோனா 3ஆவது அலை பரவல் தொடங்கியது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் !!

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, நாளை முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்க்ளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. தடுப்பூசி போடும் பணியை நாளை முதலமைச்சர் தொடக்கி வைக்கிறார் .ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவுள்ளது.

2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது . முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் 86.22 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். 58.82 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள்.
சென்னையை பொருத்த வரை 5 லட்சம் பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியே போட்டுக்கொள்ள வில்லை. அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசியை விரைந்து போடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 4 நாட்களிலேயே நெகடிவ் என வந்து விடுகிறது. தமிழகத்தல் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் இணைந்து 3ம் அலையாக பரவுகிறது . ஆனால் இந்த 3-வது அலையில் ஒரேநாளில் உலகம் முழுவதும் 18 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 21ஆம் தேதி தமிழகத்தில் ஒரேநாளில் தொற்று 36 ஆயிரத்து 84 ஆக இருந்தது. 3-வது அலையில் அந்த அளவுக்கு போகுமா? என்ற அச்சமும் உள்ளது.
ஆனால் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டவர்களுக்கு 3 அல்லது 4 நாட்களில் நெகட்டிவ் வந்துவிடுகிறது. இருந்தாலும் 5 நாட்கள் வரை அவர்களை மருத்துவமனையில் தங்க வைத்து மீண்டும் டெஸ்ட் எடுக்கப்படுகிறது. அப்போதும் நெகட்டிவ் வருவதால் அதன்பிறகு வீடுகளுக்கு அனுப்பி விடுகிறோம்.
newstm.in

