இந்தியாவில் கொரோனா 3-வது அலை தவிர்க்க முடியாதது- எய்ம்ஸ் இயக்குநர் தகவல்..!
இந்தியாவில் கொரோனா 3-வது அலை தவிர்க்க முடியாதது- எய்ம்ஸ் இயக்குநர் தகவல்..!

இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது, அதற்காக தயாராக இருக்க வேண்டும் என எய்ம்ஸ் மருத்துவ இயக்குநர் ரந்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. தினந்தோறும் கொரோனாவால் புதியதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதுவரை கொரோனாவால் 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதித்துள்ளனர். 36 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றன. இதுவரை 2.30 லட்சத்து மக்கள் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருவதால் மருத்துவ நிபுணர்கள் பலரும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என, வலியுறுத்திவருகின்றனர். தடுப்பூசி வழங்கும் பணியை வேகப்படுத்த வேண்டும்; விரிவுபடுத்த வேண்டும். மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளுக்கும் இந்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்கான பலன் உடனடியாக கிடைக்காவிட்டாலும் வைரஸ் பரவலை எதிர்காலத்தில் தடுக்க முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக, எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இது விரைவிலேயே இந்தியாவில் நடக்கும். அதனால் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அவசியமானது.
மருத்துவமனைகளை அதிகரித்தல், போதுமான படுக்கை வசதிகளை ஏற்படுத்துதல், மருத்துவமனைகளில் சிகிக்சை முறையை மாற்றுதல் ஆகியவற்றின் மூலமாக நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். கொரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவதன் மூலமும், கடுமையான ஊரங்கினை அமல் படுத்துவதன் மூலமும் கொரோனா சங்கிலியை நம்மால் உடைக்க முடியும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

