பிக்பாஸ் அஜித்துக்கு கொரோனா உறுதி !!
பிக்பாஸ் அஜித்துக்கு கொரோனா உறுதி !!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளரும் பாடகருமான ஆஜித்துக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக 6 வயதில் வந்தவர் ஆஜித். அந்த நிகழ்ச்சியில் குறைந்த மதிப்பெண் வாங்கியதால் விரைவாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
அதை தொடர்ந்து பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த அவருக்கு திடீரென பிக்பாஸ் சீசன் 4 வாய்ப்பு தேடி வந்தது. போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அவர் பாடுவதை தவிர வேறு எதற்கும் வாய் திறக்காமல் இருந்தார்.
இதனால் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் வரை தாக்குப் பிடித்தார். அதை தொடர்ந்து வெளியேறிய அவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான கேப்ரில்லாவுடன் சேர்ந்து நடனமாடி வந்தார்.
இந்நிலையில் கேப்ரில்லாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவருடன் நடனமாடி வந்த ஆஜித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், ”எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடைய உடல்நிலை சீராகவே உள்ளது. உங்களுடைய பிரார்த்தனைக்கு நன்றி. அனைவரும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வீட்டை விட்டு வெளியே சென்று வரவும். பாதுகாப்பாக இருங்கள். விரைவில் இயல்புநிலை திரும்பும் என நம்புவோம்” என்று ஆஜித் தெரிவித்துள்ளார்.

