‘பிக்பாஸ்’ பாவனி ரெட்டிக்கு கொரோனா உறுதி..!
‘பிக்பாஸ்’ பாவனி ரெட்டிக்கு கொரோனா உறுதி..!

தெலுங்கு திரையுலகில் உறுதுணை கதாபாத்திரங்களிலும் சீரியலிலும் நடித்து வந்த நடிகை பாவனி தமிழில் ‘ரெட்டை வால் குருவி’ சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளவர், ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
கடைசி நாட்கள் வரை சிறப்பாக விளையாடி மூன்றாவது இடத்தினைப் பிடித்தார். கடந்த வாரம்தான் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்தது. இந்த நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இன்ஸ்டாவில் தெரிவித்திருக்கிறார் பாவனி.
அதில், “லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது என்பதை எனது நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
Next Story

