லாக்டவுன் ஹீரோ சோனு சூட்டுக்கு கொரோனா உறுதி !!

லாக்டவுன் ஹீரோ சோனு சூட்டுக்கு கொரோனா உறுதி !!

லாக்டவுன் ஹீரோ சோனு சூட்டுக்கு கொரோனா உறுதி !!
X

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

கொரோனா லாக்டவுன் காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தது, மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்ப தனி விமானம் ஏற்படுத்திக் கொடுத்தது வரை கணக்கில்லாத உதவிகளை செய்தார். அதன் பிறகு தனது சோசியல் மீடியா பக்கங்களில் நாளுக்கு நாள் உதவி கேட்டு வருவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

கணக்கில்லாத உதவிகளை வாரி வழங்கிய சோனு சூட்டிற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தங்களுடைய 747 விமானத்தில் அவருடைய பிரம்மாண்டமான போஸ்டரை ஒட்டி கௌரவித்தது.


இந்நிலையில் நடிகர் சோனு சூட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதவில், “கோவிட் தொற்று உறுதி. மன நிலை அதை விட உறுதியாக இருக்கிறது. அனைவருக்கும் வணக்கம், இன்று காலை எனக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் ஏற்கனவே என்னைத் தனிமைபடுத்திக் கொண்டு விட்டேன். அதிக அக்கறையோடு இருக்கிறேன். ஆனால் கவலை வேண்டாம். உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க இது எனக்கு அதிக நேரத்தைத் தந்திருக்கிறது. உங்களுக்காக நான் என்றும் இருப்பேன் என்பதை மறக்காதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it