கொரோனா கட்டுப்பாடு அனைத்தும் நீக்கம்.. அரசு அதிரடி அறிவிப்பு..!
கொரோனா கட்டுப்பாடு அனைத்தும் நீக்கம்.. அரசு அதிரடி அறிவிப்பு..!

இந்தியாவில், ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா 3-வது அலை ஏற்பட்டது. இதனால், தொற்று பாதிப்பு மளமளவென அதிகரித்தது.
இதன் காரணமாக கடந்த ஜனவரி முதல் வாரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இரவு ஊரடங்கு, கடைகள் திறக்க கட்டுப்பாடு போன்றவற்றை மாநில அரசுகள் அமல்படுத்தியது.
இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கொரோனா 3-வது அலை பரவலின் வேகம் வேகமாக சரிந்துள்ளது. இதனால், நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அந்த வகையில், தலைநகர் டில்லியிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வரும் திங்கட்கிழமை முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். வரும் 1-ம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளன.
முகக்கவசம் அணியாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகையும் 1000 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடைகள், உணவு விடுதிகள் திறந்திருக்க விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது. எனினும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றுகிறார்களா..? என்பதை அரசு தீவிரமாக கண்காணிக்கும்.
தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவிகிதத்திற்கு கீழ் இருக்கும் வரை கட்டுப்பாடுகள் தளர்வு நீடிக்கும்’ என்று டில்லி அரசு தெரிவித்துள்ளது.

