Theme Check

ஒரே காவல் நிலையத்தில் 7 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு!!

ஒரே காவல் நிலையத்தில் 7 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு!!

ஒரே காவல் நிலையத்தில் 7 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு!!
X

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் 7 காவலர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோவை - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பல்லடம் ஒருங்கிணைந்த காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு ஆகிய 2 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அங்கு 63 காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், பல்லடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 4 காவலர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 4 பேருக்கும் தொற்று உறுதியானது.

அவர்களை தொடர்ந்து, அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் மேலும் 3 போலீசாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கும் வைரஸ் தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது.

palladam ps

தொற்று உறுதியான அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நோய் பரவலை தடுக்கும் விதமாக பல்லடம் காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து பல்லடம் நகராட்சி ஊழியர்கள் சுத்தும் செய்துள்ளனர்.

மேலும், தொற்றுக்கு உள்ளான காவலர்களுடன் தொடர்பில் இருந்த சக காவலர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it