Theme Check

இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரையும் விட்டு வைக்காத கொரோனா !!

இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரையும் விட்டு வைக்காத கொரோனா !!

இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரையும் விட்டு வைக்காத கொரோனா !!
X

கொரோனா 2ஆவது அலை நாடு முழுவதும் பெரும் பீதியை கிளப்பி இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தினம் தினம் பல உயிர்களை பறித்து வருகிறது.

இந்நிலையில்,பத்மஸ்ரீ விருது பெற்றவரும் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் கேகே அகர்வால் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.இவருக்கு வயது 62. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபப்ட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். டாக்டர் கேகே அகர்வாலின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Tags:
Next Story
Share it