உப்பு நீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை... நாக்பூர் விஞ்ஞானிகள் சாதனை
உப்பு நீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை... நாக்பூர் விஞ்ஞானிகள் சாதனை

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் மிக எளிமையானதும், புதுமையானதுமான கொரோனா பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) நாக்பூர் - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் (NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறை எளிதாகவும், விரைவாகவும், சவுகரியமாகவும், சிக்கனமாகவும் உள்ளது.
இதில் 3 மணி நேரத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்பதால், கிராமங்கள் மற்றும் பழங்குடியின பகுதிளுக்கு இந்த பரிசோதனை பொருத்தமாக இருக்கும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#United2fightCorona@CSIR_NEERI has developed 'Saline Gargle #RTPCR Method' for testing #COVID19 samples; you can get the result within 3 hours
— PIB in Maharashtra 🇮🇳 (@PIBMumbai) May 28, 2021
Watch Dr. Krishna Khairnar, Senior Scientist, Environmental Virology Cell, NEERI explaining how to use👇@IndiaDST@CSIR_IND pic.twitter.com/mxpYTlt7lC

