Theme Check

கொரோனா அச்சம்... திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம் ரத்து !

கொரோனா அச்சம்... திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம் ரத்து !

கொரோனா அச்சம்... திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம் ரத்து !
X

கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முதல் அலையின் போது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் திருப்பதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். பின்னர் கோயில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

அதன் காரணமாக திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் கூட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.


பின்னர் சற்று பரவல் குறைந்ததை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதியிலிருந்து இலவச தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருவதால், இன்று முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 11 ஆம் தேதி இரவுடன் இலவச தரிசனம் முடிவடையும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. மேலும் நாளொன்றுக்கு 300 ரூபாய் டிக்கெட் 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் 2ஆவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திருப்பதி தேவஸ்தானம் இந்த முக்கிய முடிவு எடுத்துள்ளது.

அதன்படி திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்தை ரத்து செய்துள்ளது. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு தரிசனத்திற்கு வரவேண்டும். ரூ.300 கட்டண தரிசனம், வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் மற்றும் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என அறிவித்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it