Theme Check

இந்தியாவில் ஒரே நாளில் 3,157 பேருக்கு கொரோனா.. இன்றைய முழு விவரம் !!

இந்தியாவில் ஒரே நாளில் 3,157 பேருக்கு கொரோனா.. இன்றைய முழு விவரம் !!

இந்தியாவில் ஒரே நாளில் 3,157 பேருக்கு கொரோனா.. இன்றைய முழு விவரம் !!
X

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது.

இந்தியாவில் பெரியளவில் குறைந்துவந்த கொரோனா பாதிப்பு தற்போது சிறிது சிறிதாக அதிகரித்தது. இந்த நிலையில், இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அதன்படி நாட்டில் புதிதாக 3,157 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,82,345 ஆக உயர்ந்தது. மேலும் ஒரே நாளில் புதிதாக 26 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,869 ஆக உயர்ந்தது.

corona

தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,723 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,38,976 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.05% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 19,500 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,89,23,98,347 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 4,02,170 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it