உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா.. பரவியது எப்படி ?

உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா.. பரவியது எப்படி ?

உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா.. பரவியது எப்படி ?
X

ஹைதராபாத் இருக்கும் நேரு உயிரியல் பூங்கா மிகவும் பிரபலமானது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அந்த பூங்காவை ஆர்வமுடன் சுற்றிபார்த்துசெல்வர். ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உயிரியல் பூங்காவுக்கும் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 8 சிங்கங்களுக்கு சுவாசப் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அந்த சிங்கங்களுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி படுத்தப்பட்டதாக இந்த பரிசோதனையை மேற்கொண்ட சிசிஎம்பி-லாகோன்ஸ் மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த தொற்று மாறுபட்ட வகை கொரோனா அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளான 8 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அவை இயல்பாக நடமாடி, உணவு உண்பதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சிங்களுக்கு கொரோனா பரவியது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஊழியர்களிடம் இருந்து கொரோனா பரவியிருக்க வாய்ப்புள்ளதா என விசாரணை நடைபெறுகிறது. மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவுமா என்பது பற்றி விலங்குகள் நலத்துறை ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டும் இதேபோல் உலகின் பல இடங்களில் உள்ள உயிரியல் பூங்காங்களில் விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால் விலங்குகளில் இருந்து இந்த தொற்று மனிதர்களுக்கு பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

newstm.in

Tags:
Next Story
Share it