Theme Check

ஒரே பள்ளியில் 90 மாணவர்களுக்கு கொரோனா.. அதிர்ச்சியில் பெற்றோர் !!

ஒரே பள்ளியில் 90 மாணவர்களுக்கு கொரோனா.. அதிர்ச்சியில் பெற்றோர் !!

ஒரே பள்ளியில் 90 மாணவர்களுக்கு கொரோனா.. அதிர்ச்சியில் பெற்றோர் !!
X

சிக்கமகளூரில் அமைந்துள்ள பள்ளி கூடமொன்றில் 69 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பள்ளிகள் அண்மையில் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர். ஆனால் அடுத்தடுத்து கொரோனா பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் சிக்கமகளூரில் மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளி ஒன்றில் மாணவர்கள் சிலருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் சோதனை செய்யப்பட்டது. இதில் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களில் 59 பேர் மாணவர்கள் மற்றும் 10 பேர் பணியாளர்கள் ஆவர். அந்த மாணவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

school new

இதனை தொடர்ந்து, சுகாதார மற்றும் மருத்துவ பணியாளர்கள் அங்கு சுகாதார பணிகள் மேற்கொண்டனர். கொரோனா பாதித்த மாணவர்கள், பணியாளர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு எதிரொலியாக, மத்திய அரசால் நடத்தப்படும் அந்த பள்ளிக்கு சிக்கமகளூர் ஆட்சியரின் உத்தரவின்படி, அடுத்த 7 நாட்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. கர்நாடக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.

இந்த சூழலில், அந்த பள்ளியில் இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் 90 பேர் மாணவர்கள் என்றும் 11 பேர் பணியாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it