Theme Check

கொரோனா முழு முடக்கம்... ரயில் டிக்கெட் முன்பதிவு கிடையாது !!

கொரோனா முழு முடக்கம்... ரயில் டிக்கெட் முன்பதிவு கிடையாது !!

கொரோனா முழு முடக்கம்... ரயில் டிக்கெட் முன்பதிவு கிடையாது !!
X

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கடைகள் அடைக்கப்பட்டு, தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டு, போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் அடிப்படையில் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். அதன்படி ரயில் இயக்கமும் நாடு முழுவதும் அதிகரிக்கப்பட்டது. எனினும் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதாவது முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ரயிலில் பயணிக்க முடியும். முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகள் கிடையாது.

இந்த நிலையில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் 2ஆவது அலை தீவிரம் அடைந்துள்ளது. உலகிலேயே ஒருநாள் கொரோனாவின் ஒருநாள் பாதிப்பு இந்தியாவின் இன்று பதிவானது. அதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள்(ஏப்.25) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்யலாம். வழக்கமாக பயணம் மேற்கொள்ள டிக்கெட் எடுப்பதற்கான மையங்கள் செயல்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it