மிக பெரிய பிரபலத்திற்கு கொரோனா உறுதி..! பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி..!
மிக பெரிய பிரபலத்திற்கு கொரோனா உறுதி..! பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி..!

பாலிவுட் நடிகர் ஆமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மும்பையிலுள்ள தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவருடைய செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள தகவலில், நடிகர் ஆமீர்கானுக்கு கோவிட்- 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதனால் ஆமீர்கானுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அவர்கள் தங்கள் உடலை பரிசோதனை செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆமீர்கானின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த அனைவரும் நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தி சினிமா உலகை சேர்ந்தவர்களில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு முதன்முதலாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு அவர்கள் வீடு திரும்பினர். அதை தொடர்ந்து பல பாலிவுட் நடிகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் ஆமீர்கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அவருடைய ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் ஆமீர்கான் தன்னுடைய 56-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது சமூகவலைதளங்களில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்தார். இது தேசியளவில் பரபரப்பை கிளப்பியது. சமூகவலைதளங்களில் இருந்து வெளியேறும் முடிவு குறித்து ஆமீர்கான் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

