Theme Check

100 மாணவர்களுக்கு கொரோனா உறுதி.. பள்ளி, கல்லூரிகளை மூட அரசு உத்தரவு..!

100 மாணவர்களுக்கு கொரோனா உறுதி.. பள்ளி, கல்லூரிகளை மூட அரசு உத்தரவு..!

100 மாணவர்களுக்கு கொரோனா உறுதி.. பள்ளி, கல்லூரிகளை மூட அரசு உத்தரவு..!
X

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அரசு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பொறியியல் கல்லூரி ஒன்றில் 93 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று அரசு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூட பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
Patiala, Amritsar medical colleges to retain 200 MBBS seats each -  Hindustan Times
இது குறித்து அம்மாநில அமைச்சர் ராஜ்குமார் வெர்கா கூறுகையில், அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் சரண்ஜித் சிங் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

Next Story
Share it