Theme Check

கொரோனா.. நெஞ்சை பிளக்கும் சம்பவம்.. வீடியோ பாருங்க வேதனை புரியும் !!

கொரோனா.. நெஞ்சை பிளக்கும் சம்பவம்.. வீடியோ பாருங்க வேதனை புரியும் !!

கொரோனா.. நெஞ்சை பிளக்கும் சம்பவம்.. வீடியோ பாருங்க வேதனை புரியும் !!
X

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை நாளுக்கு நாள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கானோருக்கு பாதிக்கப்பட்டும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்தும் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

அதேநேரத்தில் கொரோனா வீரியம் காரணமாக ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனால், பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாமல் பலரும் உயிரிழந்து வருகின்றனர். வடமாநிலங்களில் பொது இடங்களில் மனித உடல்களை எரிக்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.

குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில நடந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள விடிசா என்ற பகுதியில் கொரோனா தொற்றால் பலர் பலியாகி உள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்ததால் சடலங்களை உறவினர்களிடமும் தர முடியாது என்பதால், சுகாதாரத்துறை தரப்பில் இருந்தே உடலை சுடுகாட்டுக்கு எடுத்து சென்று எரித்து வருகின்றனர். அந்த வகையில், வழக்கம் போல அந்த சடலங்களை குவித்து வைத்து கொண்டு, மருத்துவமனையில் இருந்து, வாகனம் ஒன்று வெளியே வந்தப்போது, திடீரென ஒரு உடல் சாலையில் விழுந்தது.

திடீரென ஒரு சடலம் கீழே விழுந்ததை பார்த்ததும், பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். இதையடுத்து அந்த ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு, அதில் இருந்து டிரைவர் இறங்கி வந்து, அந்த சடலத்தை எடுத்து மறுபடியும் ஆம்புலன்ஸில் தூக்கி போட்டுக் கொண்டு வாகனத்தில் புறப்பட்டு செல்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆழ்த்தியுள்ளது.


newstm.in


Tags:
Next Story
Share it