தமிழகத்தில் வேகமாக குறைந்துவரும் கொரோனா பாதிப்பு!!
தமிழகத்தில் வேகமாக குறைந்துவரும் கொரோனா பாதிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
நேற்று 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
இதுவரை 33 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் நோய் பாதித்து மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 27,885 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 4508 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.4% லிருந்து 18.3% ஆக குறைந்துள்ளது. அதே போல் தமிழகம் முழுவதும் ஐசியூவில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை நேற்று 1104 பேர் இருந்த நிலையில் இன்று 1063 ஆக குறைந்துள்ளது.
newstm.in

