சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது- அமைச்சர் வருத்தம் !!
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது- அமைச்சர் வருத்தம் !!

தமிழகத்தில் சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரசு கண் மருத்துவமனையில் சேலம், ராமநாதபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கான “மாவட்ட பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவு சேவை” வாகனங்கள் மற்றும் கண் மருத்துவ உபகரணங்களை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பார்வையிட்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டிருக்கிற நிலையில், சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே, சென்னையில் பொதுமக்கள், 100 சதவீதம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சென்னை குடிசைப்பகுதியில் 32 சதவீதம் பேர் தான் முக கவசம் அணிவதாக வரும் தகவல் வருத்தம் அளிக்கின்றது.
அதேபோல், வணிக வளாகங்களுக்கு செல்லும் மக்களில் 58 சதவீதம் பேர் மட்டுமே முக கவசம் அணிகின்றனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் 100 சதவீதம் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

அந்தவகையில் கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளுக்கு சென்னை மாநகராட்சி வழிகாட்டியாக இருக்க வேண்டும். எனவே, சென்னையில் மக்கள் முக கவசம் அணிந்து, மற்ற பகுதி மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்து செயல்பட வேண்டும். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 29 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர், என அமைச்சர் மா.சுப்பிரமணியன்
newstm.in

