2 ஆய்வாளர்கள் உட்பட 6 போலீஸாருக்கு கொரோனா பாதிப்பு!!
2 ஆய்வாளர்கள் உட்பட 6 போலீஸாருக்கு கொரோனா பாதிப்பு!!

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் 2 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 6 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் இன்ஸ்பெக்டர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவர் கொரோனா பரி சோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டருக்கு திடீரென சளி தொந்தரவு ஏற்பட்டது. இதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கடம்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைப்போல், பெருந்துறை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப் -இன்ஸ்பெக்டர், முதல் நிலை காவலர், பெருந்துறை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் தலைமை காவலர் என 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மூவரும் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பேரூராட்சி ஊழியர்கள் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்தனர். பாதிப்பு ஏற்பட்ட போலீசார் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
newstm.in

