நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா பாதிப்பு: ரசிகர்கள் பிரார்த்தனை !!
நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா பாதிப்பு: ரசிகர்கள் பிரார்த்தனை !!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது ஒமிக்ரான் வகை தொற்று பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இது குறித்து நடிகர் அர்ஜுன் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். அனைவரும் தயவு செய்து பத்திரமாக இருக்கவும். மாஸ்க் அணிய மறக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

ஓமைக்ரான் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. எனினும் மக்கள் ஏராளமானோர் மாஸ்க் அணிவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்படலாம் என கருதி நடிகர் அர்ஜுன் தெரிவித்திருக்கிறார். அர்ஜுனின் போஸ்ட்டை பார்த்தவர்கள், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
நடிகர் அர்ஜுன், சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in

