இந்த 17 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு.. மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை !
இந்த 17 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு.. மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை !

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சின்ன குளம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் கற்பக விநாயகா தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான கூட்டு மருந்து சிகிச்சை முதல் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர், இந்தக் கூட்டு மருந்து சிகிச்சை மையத்தில் புதிய எய்ட்ஸ் நோயாளிகள் கண்டறிதல் நோயாளிகளின் எதிர்ப்பு சக்தி உடைய அளவு குறித்து முழுபரிசோதனை செய்யப்பட்டு தொடர் சிகிச்சை இந்த மையத்தில் நடைபெறும். தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 36 மையங்களிலும் மாவட்ட தலைமை மருத்துவமனையில் 55 மையங்கள் இந்த எய்ட்ஸ் நோயாளிகளுக்கான கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் இயங்கி வருகின்றன.

மேலும் தமிழக மக்களின் அவசியம் கருதி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவத்துறை சார்பில் 8 தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தொடங்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கான முதல் மைய தொடக்க விழா இன்று நடைபெற்றது, என்றார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று இந்தியாவில் 41 சதவீதமாக தற்போது அதிகரித்து வருகிறது, தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 2 நாட்களாக அதிகரித்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தலைமை சுகாதார அலுவலகம் கூட்டம் நடத்தி நோயை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
வரும் ஜூன் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் கரு முட்டை விற்பனை சம்பந்தமாக ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. கன்னித் தன்மை உள்ள இளம் பெண்களின் கருமுட்டைகள் பயன் அற்றதாக இருப்பதால் இளம் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பிறகு எடுக்கப்படும் கருமுட்டைகள் என்பது பெரும் வேதனை அளிக்கிறது.
அப்படி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கருமுட்டை விற்பனையை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து மருத்துவத் துறை, காவல்துறை தொடர்ந்து தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
newstm.in

