கொரோனா தொற்று உறுதி... பிரியங்கா காந்தியின் தமிழக பிரசாரம் ரத்து !!
கொரோனா தொற்று உறுதி... பிரியங்கா காந்தியின் தமிழக பிரசாரம் ரத்து !!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு 4 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பாஜக, காங்கிரஸ் தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். காங்கிரஸ் சார்பில் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வருவதாக இருந்தது. இந்த நிலையில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
தற்போது அதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பிரியங்கா காந்திக்கு தொற்று இல்லை. எனினும், மருத்துவர்களின் அறிவுரைப்படி அவரும் சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக அவர் தனது பிரசார நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். அசாம் மாநிலம் கோல்பாரா, கோலக்கஞ்ச், கயாகுச்சி ஆகிய இடங்களில் இன்று அவர் பிரசாரம் செய்வதாக இருந்தது. இதனை ரத்து செய்யும்படி மாநில காங்கிரஸ் நிர்வாகத்திற்கு தகவல் அனுப்பி உள்ளார். பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிரியங்கா காந்தியின் தமிழக பிரசாரமும் ரத்து செய்யப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கன்னியாகுமரியில் பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்திருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரியங்காவின் பிரச்சார பயணத்திட்டம் ரத்து செய்யப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
हाल में कोरोना संक्रमण के संपर्क में आने के चलते मुझे अपना असम दौरा रद्द करना पड़ रहा है। मेरी कल की रिपोर्ट नेगेटिव आई है मगर डॉक्टरों की सलाह पर मैं अगले कुछ दिनों तक आइसोलेशन में रहूँगी। इस असुविधा के लिए मैं आप सभी से क्षमाप्रार्थी हूँ। मैं कांग्रेस विजय की प्रार्थना करती हूँ pic.twitter.com/B1PlDyR8rc
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 2, 2021
newstm.in

