இயக்குநர் சுராஜூக்கு கொரோனா தொற்று!!
இயக்குநர் சுராஜூக்கு கொரோனா தொற்று!!

இயக்குநர் சுராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலு இயக்குநர் சுராஜின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் வடிவேலு நடித்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியானது.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இசையமைப்பு வேலைகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினருடன் லண்டன் சென்றிருந்த வடிவேலு, சுராஜ் 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்தனர்.

இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து சென்னை திரும்பினர். இங்கு வந்ததும் வடிவேலு கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடன் லண்டனில் இருந்து வந்த இயக்குநர் சுராஜூக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் இயக்குநர் சுராஜ்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
newstm.in

