பிரபல இயக்குநருக்கு கொரோனா தொற்று!!
பிரபல இயக்குநருக்கு கொரோனா தொற்று!!

பிரபல இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலையான ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வருகிறது. இதில் அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கமல்ஹாசன், வடிவேலு, விஷ்ணு விஷால், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும் கடந்த சில நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் "காலை வணக்கம். இன்று எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
🙏🏼🙏🏼 pic.twitter.com/jqqPQVEVOT
— selvaraghavan (@selvaraghavan) January 23, 2022
என்னுடன் கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மிகவும் பாதுகாப்பாக இருங்கள். முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
newstm.in

