Theme Check

சோனியா காந்திக்கு கொரோனா தொற்று..!

சோனியா காந்திக்கு கொரோனா தொற்று..!

சோனியா காந்திக்கு கொரோனா தொற்று..!
X

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

பண மோசடி குறித்த வழக்கில் வரும் 8-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவருடைய மகனும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்திக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், சோனியாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக அக்கட்சி தகவல் தெரிவித்துள்ளது.

சோனியாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், லக்னோவுக்கு சென்ற அவருடைய மகள் பிரியங்கா, தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்புவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story
Share it