Theme Check

குடியரசு துணை தலைவருக்கு கொரோனா தொற்று!!

குடியரசு துணை தலைவருக்கு கொரோனா தொற்று!!

குடியரசு துணை தலைவருக்கு கொரோனா தொற்று!!
X

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா 3ஆவது அலையான ஒமைக்ரான் நாட்டில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களும் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து துணை குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஐதராபாத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டுத் தனிமையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

vengaiya naidu

அவருடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்என பதிவிடப்பட்டுள்ளது.


இன்னும் சில தினங்களில் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற உள்ள நிலையில், தற்போது வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், அவரால் குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

வெங்கையா நாயுடுவிற்கு ஏற்கனவே ஒருமுறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்திருந்த நிலையில், தற்போது 2ஆவது முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it