நடிகர் மாதவன் குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று !!
நடிகர் மாதவன் குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று !!

இந்தியாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்தாலும் மறுபுறம் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திரைபிரபலங்கள் பலரும் தாங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே, ரன்பீர் கபூர், அமீர் கான், ஆலியா பட் என பாலிவுட் பிரபலங்களும் பலர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் மாதவனுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் மாதவன் குடும்பத்தில் பரிசோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மாதவன் இயக்கி நடித்திருக்கும் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
🚀🙏🙏 Totally overwhelmed and moved by the response to the trailer- I normally reply personally -But last evening at 5 pm-like warding of the evil eye..5 ppl at home tested Covid + ha ha ha-Was running around trying to sort things out and keep everybody comfortable and safe.
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 2, 2021
newstm.in

