Theme Check

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று..!

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று..!

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று..!
X

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும், இந்த கொரோனா வைரசால் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் என முக்கிய பணியில் ஈடுபடுபவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருப்பதால் அவர், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தொற்று உறுதியாகியுள்ள நிலையில், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story
Share it