22 மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. மத்திய அரசு எச்சரிக்கை !!
22 மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. மத்திய அரசு எச்சரிக்கை !!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தற்போது குறைந்து வருகிறது. முதல் அலையில் இருந்து தப்பித்த சில வாரங்களில் தாக்கிய 2ஆவது அலை யாரும் எதிர்பார்த்திராத அளவுக்கு பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. பல மாநிலங்களின் மருத்துவக் கட்டமைப்பை கேள்விக்கு உள்ளாக்கியது. அதன்பின்னர் ஊரடங்கு, தடுப்பூசி போன்ற பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுக்குள் வருகிறது.
இ
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,14,40,951 ஆக உள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 4,21,382 ஆக உள்ளது. இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,06,21,469 ஆக இருக்கிறது. நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.4% ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 4 வாரங்களில் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால், நாடு முழுவதும் 62 மாவட்டங்களில் மட்டுமே தினசரி கொரோனா பாதிப்பு 100க்கும் மேல் உள்ளது.

அதன்படி, கேரளா 7, மணிப்பூர் 5, மேகாலயா 3 ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பின் வார சராசரி தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும், கடந்த வாரங்களில் குறைந்த விகிதத்தை ஒப்பிடும்போது சற்று மெதுவாகவே குறைந்து வருகின்றது. இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என கூறினார்.
newstm.in

