Theme Check

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்துக்கு மருத்துவத்துறை எச்சரிக்கை !!

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்துக்கு மருத்துவத்துறை எச்சரிக்கை !!

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்துக்கு மருத்துவத்துறை எச்சரிக்கை !!
X

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஓய்ந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பெரும்பாலானோர் கொரோனா என்ற தொற்று ஒன்று பரவியதையே மறந்துவிட்டனர். ஆனால், தற்போது அடுத்த அச்சம் எழுந்துள்ளது.

கேரளம், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கவும் மருத்துவத்துறை செயலாளா் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

corona

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, டெல்லி, ஹரியாணா, குஜராத், மிசோரம், கேரள மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு உயா்ந்து வருகிறது. சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பாதிப்பு விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், நோய்த் தடுப்பு விதிகளை முறையாக பலா் கடைப்பிடிக்காதது மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் 1.37 கோடி போ் இரண்டாம் தவணை தடுப்பூசியையும், 44 லட்சம் போ் முதல் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளவில்லை.

corona

இதுகுறித்த விழிப்புணா்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவது அவசியம். தகுதியானவா்களுக்கும், குறிப்பாக முதியோா் மற்றும் இணைநோயாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். தமிழகத்தில் எந்த சூழலையும் எதிா்கொள்ளும் வகையில் தீவிர சிகிச்சைப் பிரிவு, உயா் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் தயாா் நிலையில் உள்ளன, என கூறியுள்ளார்.

newstm.in

Next Story
Share it