2 டோஸ் தடுப்பூசி போட்ட நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்: பாலிவுட்டில் பரபரப்பு !!

2 டோஸ் தடுப்பூசி போட்ட நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்: பாலிவுட்டில் பரபரப்பு !!

2 டோஸ் தடுப்பூசி போட்ட நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்: பாலிவுட்டில் பரபரப்பு !!
X

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகைக்கு கொரோனா அறிகுறி இருப்பதால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

தெலுங்கு மற்றும் மும்பை பாலிவுட் பிரபல நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால். அண்மையில், ‘அகந்தா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் பிரக்யா ஜெய்ஸ்வால் முடித்துக் கொடுத்தார். இந்த நிலையில், அவருக்கு தற்போது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

actress jaiswal

தனக்கு கொரோனா பாதிக்கப்பட்டது குறித்து நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார், அதில், நான் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். ஆனால், எனக்கு தற்போது கொரோனா அறிகுறிகள் இருப்பதால் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். ஏற்கனவே, தடுப்பூசி போடுவதற்கு முன்னதாக எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

actress jaiswal

தொடர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தேன். இருந்தும் தற்போது கொரோனா அறிகுறி வந்துள்ளதால் மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். கடந்த 10 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

A post shared by Pragya Jaiswal (@jaiswalpragya)

newstm.in

Tags:
Next Story
Share it