கொரோனா நிவாரணம் ரூ.50,000 – விண்ணப்பிப்பது எப்படி?
கொரோனா நிவாரணம் ரூ.50,000 – விண்ணப்பிப்பது எப்படி?

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணத் தொகை ரூ.50,000 பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறை வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த சூழலில், ஏராளமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என முந்தைய அ.தி.மு.க ஆட்சியிலேயே வலியுறுத்தப்பட்டது.
தி.மு.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே அனைவருக்கும் கொரோனா நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிவாரண நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து அரசின் நிவாரண உதவி பெற்றவர்களுக்கு இது பொருந்தாது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணத் தொகை ரூ.50,000 பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, www.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 'வாட்ஸ் நியூ' பகுதியில் 'Ex-Gratia for Covid-19' இணைப்பை தேர்வு செய்து விண்ணப்பிப்பதற்கான இணைப்பை தேர்வு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து உதவி தொகை பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
newstm.in

