Theme Check

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் 29,87,254 பேர் பாதிப்பு.. இன்றைய முழு விவரம் !!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் 29,87,254 பேர் பாதிப்பு.. இன்றைய முழு விவரம் !!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் 29,87,254 பேர் பாதிப்பு.. இன்றைய முழு விவரம் !!
X

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மூன்றாவது அலை தொடங்கிவிட்டதால் குறைந்த நாட்களில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 23,443 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், இன்று அது சற்று அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 23,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்படியாக இன்றைய தினமும் 5 ஆம் நாளாக 23,000 க்கும் மேல் பதிவாகி உள்ளது.

corona

இன்றைய தினம் கொரோனாவிலிருந்து சுமார் 15,036 பேர் மீண்டுள்ளனர். அதேநேரம், இன்று ஒரே நாளில் 29 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் 13 பேர் தனியார் மருத்துவமனையிலும், 16 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இன்று பாதிப்பு உயர்ந்ததை தொடர்ந்து, சுமார் 1,61,171 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் இதுவரை தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,87,254 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27,89,045 என்றும், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,038 என்றும் ஆகியுள்ளது.

மாவட்டங்கள் அளவில் சென்னையில் இன்று 8,305 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் கோவையில் 2228 பேருக்கும், செங்கல்பட்டில் 2143 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


newstm.in

Next Story
Share it