கொரோனாவால் பலியானவர் உடலை ஆற்றில் வீசும் கொடூரம்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ !!
கொரோனாவால் பலியானவர் உடலை ஆற்றில் வீசும் கொடூரம்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ !!

கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை ஆற்றில் வீசும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலை தாக்கம் மிகவும் உக்கிரமாக இருந்துள்ளது. வடமாநிலங்களில் மருத்துவக்கட்டமைப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது கொரோனா பாதிப்பு. அங்கு உரிய வசதிகள் இல்லாததால் உயிரிழப்புகள் அதிகரித்தன. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

குறிப்பாக உத்தரபிரதேசத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அறிவியல் பூர்வமான, ஆக்கப்பூர்வமான எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் அங்கு மக்கள் உயிரிழந்து வந்த நிலையில் பின்னர் ஊரடங்கு விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
இதனிடையே அங்கு உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க மின்மயானங்களில் இடமில்லாததால் பொதுஇடங்களில் வைத்து எரிக்கப்பட்டு வந்தது. அங்கு இடம்கிடைக்காததால் பலரும் உறவினர்களின் உடல்களை ஆற்றில் வீசிச்சென்ற கொடூரம் நடந்துள்ளது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பால்ராம்பூர் மாவட்டத்தில் கடந்த 28ஆம் தேதி அப்படியொரு சம்பவத்தை இருவர் செல்பொனில் படம்பிடித்தனர். அந்த வீடியோவில் இரண்டு ஆண்கள், அவர்களில் ஒருவர் பிபிஇ உடை அணிந்துள்ளார், அவர்கள் ராப்தி ஆற்றின் பாலத்திலிருந்து ஒரு உடலை தூக்கி எறிகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளோம், சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் கங்கை நதிக்கரையில் நூற்றுக்கணக்கான உடல்கள் வீசப்பட்டன. அதிகபட்சமாக பக்ஸர் மாவட்டத்தில், 71 சடலங்கள் ஆற்றங்கரையில் இருந்து மீட்கப்பட்டன. இதன்பின்னர் ஆறுகளில் இறந்த உடல்கள் வீசப்படாமல் இருக்க பல வட மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் இதனை தடுக்க நதிக் கரையோரங்களில் ரோந்துப் பணிகளை அதிகரிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
Shocking Video Shows Covid Patient's Body Being Thrown In River In UP
— LoneWolf🕵BananaRepublic😷 (@LoneRider2019) May 30, 2021
On camera, two men - one of them in a PPE suit - are seen lifting a body on the bridge over river Rapti.
Detail report in #Thread#ViralVideo 1/1pic.twitter.com/imZEccLQYF
newstm.in

