மதுரையில் இருவருக்கு கொரோனா அறிகுறி! - அதிர்ச்சியில் மக்கள்!!
மதுரையில் இருவருக்கு கொரோனா அறிகுறி! - அதிர்ச்சியில் மக்கள்!!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை வார்டு துவக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து சில நாட்களுக்கு முன்பாக திருச்சி விமான நிலையத்தில் வந்தடைந்தனர்.
அப்போது சுகாதாரத்துறை சார்பில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் எந்த தொற்று அறிகுறியும் இல்லாத நிலையில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில் திடீரென கடந்த திங்கள் கிழமை இருவருக்கும் காய்ச்சல் உருவானநிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ்க்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முழுமையான போர்த்திய தொற்றுநோய் தடுப்பு ஆடைகளை அணிவிக்கப்பட்டு அவர்கள் முழுவதிலும் கண்காணிக்கப்படவுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு கொரோனா தாக்கம் இருக்கலாம் என்ற அடிப்படையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மதுரை மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in


