Theme Check

தமிழகத்தில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா.. 2,000-ஐ நெருக்கும் தினசரி பாதிப்பு !

தமிழகத்தில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா.. 2,000-ஐ நெருக்கும் தினசரி பாதிப்பு !

தமிழகத்தில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா.. 2,000-ஐ நெருக்கும் தினசரி பாதிப்பு !
X

தமிழகத்தில் 1,727 பேருக்கும், வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் என 1,728 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,594 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 1,728ஆக உயர்ந்துள்ளதாக தமிழக மருத்துவத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 30ஆம் தேதி வரை 700 என்ற அளவிலேயே தினசரி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவந்தது. அடுத்த நாளில் இருந்து தினசரி ஆயிரத்துக்கு மேல் கொரோனா பாதித்து அதிகரித்து வருவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

1,03,119 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,728ஆக உள்ளது. கொரோனாவால் மேலும் 6 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,796ஆக உயர்ந்துள்ளது. இன்று அரசு மருத்துவமனைகளில் 5 பேரும், தனியார் மருத்துவமனைகளில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

corona

கொரோனாவிலிருந்து மேலும் 662 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 27,05,696 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 10,364ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 876 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் நேற்று 776 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 876ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மேலும் அதிகரிக்கலாம் என்பதால் மக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. எனினும் ஒருசில மாவட்டங்களில் சிறிது சிறிதாக அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

corona corona

newstm.in

Next Story
Share it