Theme Check

அதிர்ச்சி செய்தி..!! இளம் பெண் அந்தரங்க உறுப்பில் கொரோனா டெஸ்ட்..!!

அதிர்ச்சி செய்தி..!! இளம் பெண் அந்தரங்க உறுப்பில் கொரோனா டெஸ்ட்..!!

அதிர்ச்சி செய்தி..!! இளம் பெண் அந்தரங்க உறுப்பில் கொரோனா டெஸ்ட்..!!
X

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியைச் சேர்ந்த லேப் டெக்னீசியன் ஒருவர் கொரோனா சோதனைக்காக என்று கூறி பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்து ஸ்வாப் (Swab) மாதிரி எடுத்த வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம், வணிக வளாகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு லேப்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைகளுக்கான ஸ்வாப் மாதிரிகள் மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து மட்டுமே எடுக்கப்படுகின்றன. ஆனால் அந்த லேப் டெக்னீசியன், ஒரு இளம் பெண்ணிடம் மேலும் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி, அந்த பெண்ணின் அந்தரங்க பாகங்களில் இருந்து ஸ்வாப் மாதிரியை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண், இதுகுறித்து தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். மருத்துவரிடம் சென்று சகோதரர் விசாரித்துள்ளார். அப்போது, அத்தகைய சோதனை எதுவும் தேவையில்லை என மருத்துவர் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண், பத்னேரா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, லேப் டெக்னீசியனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 12 சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இரு தரப்பினரையும் விசாரித்த நீதிபதிகள், ஐபிசி சட்டப் பிரிவுகள் 354 மற்றும் 376 ஆகியவற்றின் கீழ் லேப் டெக்னீசியனை குற்றவாளி என்று கண்டறிந்து 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தனர்.

Next Story
Share it