கொரோனா பரிசோதனையை அதிகரிக்கணும்.. சுகாதாரத் துறை எச்சரிக்கை..!
கொரோனா பரிசோதனையை அதிகரிக்கணும்.. சுகாதாரத் துறை எச்சரிக்கை..!

சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உருமாறிய புதிய கோவிட் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவின் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் ஒமைக்ரான் எக்ஸ்இ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது நாள்தோறும் உருவாகும் தொற்று பாதிப்பு 1,500 என்ற அளவில் உள்ளது.
கேரளா, மிசோரம், மகாராஷ்டிரா, புதுடெல்லி, ஹரியானா மாநிலங்களில் புதிய கோவிட் வேகமெடுத்துள்ளது. இந்த 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், “கோவிட் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். கோவிட் நோய் கண்டறிதல், சோதனை அதிகரித்தல், தடுப்பூசி முழுமைப்படுத்துதல், போதிய மருத்துவ வசதிகளை தயார் படுத்துதல் என மாநில அரசு விரைந்து பணியாற்ற வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story

