Theme Check

பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை.. புதிய அறிவிப்பு

பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை.. புதிய அறிவிப்பு

பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை.. புதிய அறிவிப்பு
X

உலகம் முழுவதும் பெரும் அழிவையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ள கொரோனா தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் மீண்டும் கொரோனா தொற்று பரவுமோ என்ற அச்சம் மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது. இதனால் எப்போதும் விழிப்புடன் உலக சுகாதார அமைப்பு உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொரு நாட்டின் அரசும் மேற்கொண்டு வருகிற. அதேநேரத்தில் தொற்று குறைந்து வருவதால் முன்பு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை பல்வேறு நாடுகள் தளத்தி வருகின்றன.

corona

அந்த வரிசையில், கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. கொரோனா பரிசோதனை உள்ளிட்ட வழிமுறைகளை வெளியிட்டது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

corona

அதேவேளையில் பயணிகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் பயணத்துக்கு முன்பு காண்பிக்க வேண்டும் என வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் கெவின் முனோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த்துள்ளார் .

newstm.in

Tags:
Next Story
Share it