போதைபொருள் வழக்கில் கைதான பிரபல நடிகைக்கு கொரோனா ! தமிழ் நடிகை கவலை !!

போதைபொருள் வழக்கில் கைதான பிரபல நடிகைக்கு கொரோனா ! தமிழ் நடிகை கவலை !!

போதைபொருள் வழக்கில் கைதான பிரபல நடிகைக்கு கொரோனா ! தமிழ் நடிகை கவலை !!
X

பிரபல தமிழ் திரைப்பட நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரி நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். கன்னட திரையுலகில் போதை பொருள் புழக்கம் குறித்த விசாரணையில் அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இது தொடர்பான வழக்கில் வழக்கில் கைதாகி, 120 நாட்கள் சிறையில் இருந்து விடுதலையானவர் நடிகை சஞ்சனா கல்ராணி.

இந்த நிலையில் அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அவருக்கு சளித்தொல்லையும், மூச்சுத்திணறலும் இருந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது மணிப்பால் மருத்துவமனையில் சஞ்சனா கல்ராணி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சஞ்சனா கல்ராணி கூறுகையில், தயவுசெய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். என் வீட்டில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். கொரோனா வாரியர்சான அவர்கள் எனக்கு ஆலோசனை வழங்கினர் என்றாலும், எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. விரைவில் குணமடைவேன் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it