Theme Check

ஹர்பஜன் சிங்குக்கு கொரோனா: அவரது மனைவியும் தனிமைப்படுத்தப்பட்டார் !!

ஹர்பஜன் சிங்குக்கு கொரோனா: அவரது மனைவியும் தனிமைப்படுத்தப்பட்டார் !!

ஹர்பஜன் சிங்குக்கு கொரோனா: அவரது மனைவியும் தனிமைப்படுத்தப்பட்டார் !!
X

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகளவில் உள்ளது. இந்த கொரோனா பாதிப்புக்கு விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் இலக்காகி வருகின்றனர்.

Harbhajan-Singh

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று எனக்கு உறுதியாகியுள்ளது. தேவையான கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னை நேரில் சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கவனத்துடனும், எச்சரிக்கையாகவும் இருங்கள், என தெரிவித்துள்ளார்.
harbhajan_singh_csk
இதேபோல், ஹர்பஜன் சிங்கின் மனைவியும் முன்னாள் பாலிவுட் நடிகையுமான கீதா பாஸ்ராவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில், விரைவில் இரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தனர்.

ஹர்பஜன் சிங், கடந்த மாதம் தான் அனைத்துவடிவ கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


newstm.in

Tags:
Next Story
Share it