Theme Check

டெல்லியை மிரட்டும் கொரோனா.. 7 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் ?

டெல்லியை மிரட்டும் கொரோனா.. 7 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் ?

டெல்லியை மிரட்டும் கொரோனா.. 7 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் ?
X

இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று பெருத்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை புதிய உச்சத்தை தினந்தோறும் தொற்று ஏற்படுத்தி வருகிறது.

இதனால் மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்தது. குறிப்பாக தொற்று சங்கிலியை உடைத்து பரவலை கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி ஊரடங்கை அமல்படுத்த ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டது. இதன்படி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி டெல்லியில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஊரடங்கு அமலில் இருந்தது.

எனினும், டெல்லியில் நேற்று மட்டும் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,462 ஆக அதிகரித்தது. அதேபோல் கொரோனாவால் 167 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் அனைத்து நீதிபதிகளும் அந்தந்த நீதிமன்றங்களின் அவசர வழக்குகளை மட்டுமே வீடியோ கான்பரன்சிங் முறை மூலம் எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக டெல்லியில் இன்று இரவு முதல் அடுத்த திங்கள் கிழமை வரை முழு ஊரடங்கு அறிவிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இன்று இரவு முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை வரை ஊரடங்கு விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in


Tags:
Next Story
Share it