30 மாணவர்களுக்கு ஒரே ஊசியைப் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி.

30 மாணவர்களுக்கு ஒரே ஊசியைப் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி.. மருத்துவர் சர்ச்சை விளக்கம் !!

30 மாணவர்களுக்கு ஒரே ஊசியைப் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி.
X

30 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஊசியைப் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் ஜெயின் பப்ளிக் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவர் ஜிதேந்திரா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் தடுப்பூசி செலுத்தும் போது ஒரே ஊசியை மீண்டும் மீண்டும் அனைத்து மாணவர்களுக்கும் பயன்படுத்தியுள்ளார்.

இதனை பல மாணவர்கள் கவனிக்கவில்லை. எனினும் இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஒருவர், அங்கு நடந்த நிகழ்வை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் மருத்துவர் ஜிதேந்திரா 30 மாணவர்களுக்கு ஒரே ஊசியில் தடுப்பூசி செலுத்துவது பதிவாகியுள்ளது.
vaccaine
1990களில் இந்தியாவில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் ஊசி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. எச்ஐவி பரவலைத் தடுக்கும் வகையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் ஊசி புழக்கத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரிக்கை விடப்பட்டது.

இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, ஒரு நபருக்கு பயன்படுத்திய ஊசியை இன்னொருவருக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது எனக்குத் தெரியும். அதனால் தான் எனக்கு இந்தப் பணியை ஒதுக்கிய மேலதிகாரிகளிடம் நான் எல்லா மாணவர்களுக்கும் இந்த ஒரு ஊசியைத் தான் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்த வேண்டுமா என்று கேள்வி எழுப்பினேன். அவர்கள் ஆம் என்றார்கள். நான் அதன்படியே செய்தேன். இது எப்படி எனது தவறாகும், என்று வினவிய வீடியோ இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது.
vaccaine
இது தொடர்பாக மருத்துவர் ஜிதேந்திர், மாவட்ட தடுப்பூசி திட்ட அலுவலர் மருத்துவர் ராகேஷ் ரோஷன் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it