Theme Check

கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு!

கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு!

கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு!
X

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டு தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் இரண்டு தவணைகள் செலுத்தப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல்திறன் குறித்து வல்லுநர் குழு ஆய்வு செய்து முடிவுகளின் அடிப்படையில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுவதில் இரண்டு தவணை தடுப்பூசிக்கு இடையிலான கால அவகாசத்தை நீட்டிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து இந்த முடிவுகளின் அடிப்படையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் ஒன்றை சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளது.

அதில், கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசம் 21 நாட்களாக இருக்கும் நிலையில் இதனை 6-8 வாரம் என நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரம் அதிக பட்சமாக 8 வாரங்களை தாண்டக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தமாக இதுவரை 4.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it