இனி 15 முதல் 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி! பிரதமர் அதிரடி!!
இனி 15 முதல் 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி! பிரதமர் அதிரடி!!

இந்தியாவில் 15-18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்காக உரையாற்றிய அவர், கொரோனாவை எதிர்த்து போராட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை முழுமையாக இல்லை என்று கூறினார்.
கடும் சவால்களுக்கு இடையே தடுப்பூசி திட்டம் பாதுகாப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மேலும் பல கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன என தெரிவித்தார்.

கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தொடர்ந்து நாம் முன்னணியில் இருந்து வருகிறோம். இந்திய பொருளாதாரமும் சீரான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.
இந்தியாவில் 15-18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கோவா, உத்தராகண்டில் முதல் தவணை தடுப்பூசி 100% செலுத்தப்பட்டுள்ளது என்றும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது எனவும் பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
newstm.in

