கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டில் 1 மணிநேரம் வைக்க அனுமதி!!
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டில் 1 மணிநேரம் வைக்க அனுமதி!!

கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று கூறும்போது, கடந்த 24 மணிநேரத்தில் 13,550 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 104 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 13,093 ஆக உயர்ந்துள்ளது.
10,283 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 27,97,779 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 11% ஆக உள்ளது.
உயிரிழந்த கொரோனா நோயாளிகளுக்கு அவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்த முடியாத சூழல் உள்ளதால் அவர்களுக்கு மனஅழுத்தமும் கூடுகிறது.
இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்படும். அந்த உடல்களை வீட்டில் 1 மணிநேரம் வைக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளது என கூறியுள்ளார்.
Tags:
Next Story

