Theme Check

கொரோனா வார்டு.. என் வாழ்க்கையை முடித்துவிட்டேன்.. 45 வயது நபருக்கு உதவிய 85 வயது முதியவர் மரணம் !!

கொரோனா வார்டு.. என் வாழ்க்கையை முடித்துவிட்டேன்.. 45 வயது நபருக்கு உதவிய 85 வயது முதியவர் மரணம் !!

கொரோனா வார்டு.. என் வாழ்க்கையை முடித்துவிட்டேன்.. 45 வயது நபருக்கு உதவிய 85 வயது முதியவர் மரணம் !!
X

இந்தியாவில் அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்குள்ள நாக்பூரில் கொரோனா துயரத்தில் நடந்த சம்பவம் இப்போது நாடு முழுவதும் பெரும் கவனத்தை பெற்று வருகிறது.

அதாவவது நாக்பூர் இந்திரா காந்தி மருத்துவமனையில் நாராயண் என்ற 85 வயது முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு அவருக்கு இவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானது. அங்கு தங்கி ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், தற்போது அங்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவது அனைவரும் அரிந்தது.

இவரது ஆக்சிஜன் லெவலும் இறங்கிக் கொண்டிருந்தது. அந்தவேளையில் அதே மருத்துவமனையில் பெண் தனது 40 வயது கணவருக்காக மருத்துவமனையில் இடம் கேட்டு கதறி அழுது மன்றாடிக்கொண்டிருந்தார். ஆனால், அந்நபருக்கு அங்கு இடம் கிடைக்கவில்லை. மருத்துவர்கள் மருத்துவமனையில் மேலும் இடம் இல்லை என கூறிவிட்டனர்.

இந்த நிலையில் அதனை பார்த்த அந்த 85 வயது முதியவர் நாராயண் மருத்துவர்களிடம் சென்று, நான் என் வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். அந்த இளைஞரின் உயிர் முக்கியம், அவரது குழந்தைகளும் சிறு வயதினர், என் படுக்கையை அவருக்குக் கொடுங்கள் என்று கூறியுள்ளார். மருத்துவர்கள் அவரிடம் உங்கள் உடல் நிலை சரியாக இல்லை உங்களுக்கும் சிகிச்சை அவசியம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் அந்த முதியவர், தன் மகளைக் கூப்பிட்டு அவரிடம் சூழ்நிலையை விளக்கி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றார். அதேபோல் அந்த 45 வயது நபருக்கு மருத்துவமனையில் இடம் கிடைத்தது. ஆனால் வீட்டுக்குச் சென்று 3 நாட்கள்தான் உயிரோடு இருந்துள்ளார். அதன்பின்னர் முதியவர் இறந்துவிட்டார்.

இவரைப்பற்றி சமூக ஊடகத்தில் நாராயண் தபால்கர் இன்னொரு நோயாளிக்காக தன் மருத்துவமனை படுக்கையை தியாகம் செய்ததாக பதிவு வெளியானது. மேலும், தபால்கர் கூறியதாக அவரது மகள் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஏப்ரல் 22ஆம் தேதி 85 வயதான என் தந்தையின் ஆக்சிஜன் லெவல் இறங்கியது, ஐஜிஆர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். பெரிய முயற்சிக்குப் பிறகு அவருக்கு மருத்துவமனையில் அனுமதி கிடைத்தது, படுக்கையும் கிடைத்தது. ஆனால் 2 மணி நேரத்தில் அவர் மருத்துவமனையிலிருந்து வந்து விட்டார், அதாவது கடைசி நேரத்தை எங்களுடன் கழிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். இளம் நோயாளி பற்றியும் குறிப்பிட்டார் என்றார்.

தற்போது இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it