Theme Check

தடுப்பூசி போட்டாலும் கொரோனா வரும்! நோயியல் நிபுணர் அதிர்ச்சி தகவல்!

தடுப்பூசி போட்டாலும் கொரோனா வரும்! நோயியல் நிபுணர் அதிர்ச்சி தகவல்!

தடுப்பூசி போட்டாலும் கொரோனா வரும்! நோயியல் நிபுணர் அதிர்ச்சி தகவல்!
X

இந்தியா முழுவதும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக வயதானவர்களுக்கு செலுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனையில் தொற்றுநோய் பிரிவு டாக்டரான தொற்று நோயியல் நிபுணரும், கர்நாடக அரசின் கொரோனா தடுப்பு ஆலோசனை குழு உறுப்பினர் கொரோனா குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதன்படி இந்தியாவில் மிகத் தீவிரமாக பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா வைரஸ் தாக்கும். ஆனால் நோய் பாதிப்புகள் ஏற்படுவது குறைவாக இருக்கும். அதாவது காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் வராது.

அதனால் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், வாழும் காலம் வரை முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுதல் இவற்றை கடைப்பிடிப்பதால் நமக்கும், நமக்கு சுற்றி இருப்பவர்களுக்கும் கூடுதல் நன்மைகளை விளைவிக்கும் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


பொதுவாக ஒரு நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டறியவோ, தயாரிக்கவோ நீண்ட காலம் ஆகும். ஆனால் கொரோனா தடுப்பூசி 10 மாதங்களில் வெளிவந்துள்ளதால் இந்த தடுப்பூசியில் நோயை கட்டுப்படுத்தும் திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியவில்லை. 3வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. அதன் பிறகு முழுமையா விவரங்கள் தெரியவந்த பின்னரே அதன் செயல்பாடுகளை முற்றிலும் அறிய முடியும் . இது ஒருவகையான கவசம் மட்டுமே எனத் தெரிவித்துள்ளார்.

Tags:
Next Story
Share it